அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: ஹிமாச்சல பிரதேச அரசு திட்டம்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: ஹிமாச்சல பிரதேச அரசு திட்டம்
UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 05:53 PM
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துஉள்ளது.மேலும், ஏ.ஐ. எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, மாநில கல்வித் திட்டத்தில் பெரும் மாற்றத்தையும், புரட்சியையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.மாநில மொழி
நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்படுகின்றன. பொருளாதார வசதி யில் பின்தங்கிய குடும்பத்து பிள்ளைகள், இந்த பள்ளிகளையே பெரிதும் நம்பி உள்ளனர். இதனால், ஆங்கில வழிக்கல்வி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஆங்கில வழிக் கல்வி கற்க வேண்டுமெனில் தனியார் பள்ளிகளில் சேர்வதே ஒரே வாய்ப்பாக உள்ளது. அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகள் தவிர்க்க முடியாததாகி விட்டதை அடுத்து, ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழியாக மாறி விட்டது. இந்த அடிப்படையில், கல்வித்துறையில் மிகப் பெரிய அதிரடி மாற்றத்தை கொண்டு வர, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான ஹிமாச்சல பிரதேச காங்., அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநில அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்பது இதுவரையில் இல்லை.நடவடிக்கை
இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துவதாக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கில வழிக்கல்வியை கற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தற்போதுள்ள அரசு ஆசிரியர்களுக்கும், கூடுதல் ஆங்கில பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அரசு பள்ளிகளின் செயல்பாட்டில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பள்ளி களில் இருப்பதைப் போலவே, மாநில அரசு பாடத் திட்டத்திலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது
