விரிவுரையாளர் நியமன புகார் விசாரணை நடத்த அரசு முடிவு
விரிவுரையாளர் நியமன புகார் விசாரணை நடத்த அரசு முடிவு
UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 05:55 PM
இதுகுறித்து, கல்லுாரி கல்வி இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர் கீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு கல்லுாரிகளில், 1,500 கவுரவ விரிவுரையாளர்களின் பணி நியமனத்தில், தேர்வுக்குழு அமைக்கப்படாமல் நேரடியாக மண்டல இணை இயக்குனர்களின் கீழ், சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் மேற்கொண்டு, பணி வழங்கியதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இயக்குனரகத்துக்கு தேவைப்படும் தகவல்களை விரைந்து அனுப்ப வேண்டும்.கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், தேர்வுக்குழு உறுப்பினர்களாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்வோராகவும், பணியில் இருந்த இணை இயக்குனர்கள், கல்லுாரி முதல்வர்கள் விபரம் அனுப்ப வேண்டும்.அண்ணாமலை பல்கலையில், மிகை பணியாளர்களின் வரவால் பாதிக்கப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள்; பாலியல் புகாரில் பணி நீக்கப்பட்டவர்களின் விபரமும் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
