தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லுாரிகளில் குட்கா விற்றால் கடும் நடவடிக்கை

பள்ளி, கல்லுாரிகளில் குட்கா விற்றால் கடும் நடவடிக்கை

பள்ளி, கல்லுாரிகளில் குட்கா விற்றால் கடும் நடவடிக்கை


UPDATED : நவ 26, 2023 12:00 AM

ADDED : நவ 26, 2023 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2023 12:00 AM ADDED : நவ 26, 2023 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளி, கல்லுாரி வளாகம் அருகே, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை மீது நடவடிக்கை எடுக்க, 247 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 2,303 கடைகளில் ஆய்வு செய்ததில், 223 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டன. அங்கு, 4.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,343 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 63 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 211 சிறு குற்ற செயல்கள் கண்டறியப்பட்டு, 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:தமிழகம் முழுதும் அக்., 29ம் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில், 442 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு, 160 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது; 9.82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் வளாகம் மற்றும் அதன் அருகில் போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us