பேராசிரியர்களை நியமிக்காமல் படிப்புகள் நடத்தக்கூடாது
பேராசிரியர்களை நியமிக்காமல் படிப்புகள் நடத்தக்கூடாது
UPDATED : நவ 27, 2023 12:00 AM
ADDED : நவ 27, 2023 09:57 AM
அ நிறம் | அளவு
ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்:
கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில நிபந்தனைகளில், பேராசிரியர் நியமனம் குறித்து, முக்கிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்லுாரிகள் எந்த தொழில்நுட்ப படிப்பை துவங்கி, அதில் மாணவர்களை சேர்த்தாலும், அதற்கு முன், ஏ.ஐ.சி.டி.இ., யின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.உரிய வகுப்பறை கட்டடம், ஆய்வகங்கள், நுாலகங்களில் சம்பந்தப்பட்ட படிப்புக்கு தேவையான புத்தகங்கள் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ஏ.ஐ.சி.டி.இ., விதிப்படி, உரிய கல்வித்தகுதியுடைய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்காமல், படிப்பை துவங்கவோ, மாணவர்களை சேர்க்கவோ கூடாது. இவ்வாறு விதிகளில் கூறப்பட்டுள்ளது.
