தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 27 லட்சம் கையெழுத்து

நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 27 லட்சம் கையெழுத்து

நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 27 லட்சம் கையெழுத்து


UPDATED : நவ 27, 2023 12:00 AM

ADDED : நவ 27, 2023 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2023 12:00 AM ADDED : நவ 27, 2023 09:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை நேரடியாக, 16 லட்சம் கையெழுத்து, போஸ்ட் கார்டு மூலம், 11 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம் என்று தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி கூறினார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில், ஈரோடு மாவட்ட தி.மு.க., இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலர் கே.இ.பிரகாஷ் அறிமுக உரையாற்றினார். ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் வரவேற்றார்.வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம், எம்.பி., அந்தியூர் செல்வராஜ் பேசினர்.இதில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி பேசியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதை அகற்றியே தீர வேண்டும் என்பதற்காக, 50 லட்சம் கையெழுத்து பெற்று வருகிறோம். சேலம் மாநாட்டில் முதல்வரிடம், 50 லட்சம் கையெழுத்தை வழங்கி, டில்லிக்கு சென்று கொடுப்போம்.இதுவரை நேரடியாக, 16 லட்சம் கையெழுத்து, போஸ்ட் கார்டு மூலம், 11 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம். நாங்கள் எப்போதும், மக்களை பற்றியே சிந்திக்கிறோம். ஆனால், பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னையும், முதல்வர் ஸ்டாலினையுமே நினைக்கிறார்.இவ்வாறு பேசினார்.மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், முன்னாள் எம்.பி., கந்தசாமி, மேயர் நாகரத்தினம், மாநகர செயலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.தி.மு.க.,வினருக்கு பொற்கிழி
ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மூத்த தி.மு.க.,வினருக்கு பொற்கிழி வழங்கும் விழா, பெருந்துறை அருகே சரளையில் நேற்று நடந்தது. மொத்தம், 2,580 பேருக்கு, 10,000 ரூபாய் பொற்கிழி வழங்கி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கடந்த இரு ஆண்டில், 45 மாவட்டங்களில், 44.76 கோடி ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. டிச.,17ல் சேலத்தில் நடக்கவுள்ள இளைஞரணி மாநாடு, தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us