மாணவன் கழுத்தில் கத்தி குத்து: கல்லூரி பஸ்சில் ஷாக்
மாணவன் கழுத்தில் கத்தி குத்து: கல்லூரி பஸ்சில் ஷாக்
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 09:54 AM
கரூர்:
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் நிதீஷ் குமார். இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் இருக்கும் செட்டிநாடு இன்ஜினியரிங் என்ற தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.மேலும் இவர் தினந்தோறும் முசிறியில் இருந்து கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் சென்று வருவது வழக்கம். அதே கல்லூரி வேனில் அவருடன் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலை என்பவரும் வந்துள்ளார்.இந்நிலையில் இருவரும் சில நாட்களாக வேனில் பேசி கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலை நேற்று (நவ.,27) கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது நிதீஷ் குமாரிடம் கேட்டுள்ளார்.இதற்கு நிதீஷ்குமார் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதீஷ் குமாரை அண்ணாமலை தாக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
