தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவு, சூரியனுக்கு அடுத்து வீனஸ்: சுக்ராயன் திட்டம் பற்றி இஸ்ரோ தலைவர் பேட்டி

நிலவு, சூரியனுக்கு அடுத்து வீனஸ்: சுக்ராயன் திட்டம் பற்றி இஸ்ரோ தலைவர் பேட்டி

நிலவு, சூரியனுக்கு அடுத்து வீனஸ்: சுக்ராயன் திட்டம் பற்றி இஸ்ரோ தலைவர் பேட்டி


UPDATED : நவ 28, 2023 12:00 AM

ADDED : நவ 28, 2023 04:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2023 12:00 AM ADDED : நவ 28, 2023 04:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நிலவுக்கு சந்திரயான்-3, சூரியனுக்கு ஆதித்யா எல்1 திட்டங்களுக்கு பிறகு வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை ஏவி, நிலவின் தென்துருவத்தில் முதன்முறையாக கால்பதித்து சாதித்தது. இதனைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செலுத்தியுள்ளது. இது தற்போது சூரியனை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்படி அடுத்தடுத்து சாதனை புரிந்து வரும் இஸ்ரோ, அடுத்ததாக வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய தயாராகி வருகிறது.சுக்ராயன் மிஷன் என அழைக்கப்படும் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: 
சந்திரயான், ஆதித்யாவை தொடர்ந்து வீனஸ் குறித்து ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக உள்ளது. இத்திட்டம் முழுமையாக வளர்ச்சியடைந்துவிட்டது; எதிர்காலத்தில் பூமியின் வளிமண்டலம் சுக்ராயனை போல் நச்சுத்தன்மையுடையதாக மாறும்; இதனால் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us