தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பலவீனமடைந்த பள்ளி கட்டடம் மாணவர் சேர்க்கை குறையும் அவலம்

பலவீனமடைந்த பள்ளி கட்டடம் மாணவர் சேர்க்கை குறையும் அவலம்

பலவீனமடைந்த பள்ளி கட்டடம் மாணவர் சேர்க்கை குறையும் அவலம்


UPDATED : நவ 29, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:
திருவொற்றியூர், எர்ணாவூர், மகாளியம்மன் கோவில் தெருவில், ஒருங்கிணைந்த வளாகத்தில் இரண்டு அங்கன்வாடி மையம், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவை செயல்படுகின்றன.மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு, எட்டு வகுப்பறைகள் உள்ளன. அதில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் லேப் உள்ளிட்டவை அடங்கும். இதில், ஐந்து கட்டடங்களில் மட்டுமே வகுப்புகள் நடத்த முடிகின்றன.இதனால், 230க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வகுப்பறை கட்டடம் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அறை மற்றும் 10ம் வகுப்பறை உள்ளிட்டவை அடங்கிய கட்டடத்தின், மேல்தளம் பலவீனமாகி உள்ளது.கனமழை பெய்து வருவதால், கட்டடத்தின் மேல்தளத்தில் தேங்கிய மழைநீர், தளம் வழியாக கசிந்து கட்டடம் பலவீனமாகி வருகிறது. தவிர, முகப்பு பக்ககத்தில், கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து ஆங்காங்கே விழுந்துள்ளன.மேலும், உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு, தலா ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால், பெற்றோர் மாணவர்களை, இங்கு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. எர்ணாவூர் சுற்றுவட்டாரத்தில் ஒரே மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டும், அடிப்படை வசதியின்மை, பழுதான கட்டடத்தால், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதில் சிக்கல் உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, கட்டட விபத்து நிகழும் முன், மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். மிக பலவீனமாக இருப்பின், கட்டடத்தை இடித்து, புது கட்டடம் கட்டி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us