UPDATED : நவ 29, 2023 12:00 AM
ADDED : நவ 29, 2023 10:13 AM
பாகூர்:
மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில், அறிவியல் மற்றும் சிறுதானிய உணவு கண்காட்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் அரிவரதன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முதன்மை கல்வி அலுவலர் தனசெல்வன் நேரு கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் மற்றும் சிறுதானிய உணவு படைப்புகளை பார்வையிட்டார்.அப்போது, அரசு பள்ளி மாணவர்கள், மென்மேலும் திறமையை வளர்த்து, சிறந்த அறிவி யலாளர்களாகவும், கல்வி யாளர்களாகவும், நல்ல குடிமகன்களாகவும் உயர வேண்டும் என, வாழ்த்தினார்.நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகையன், வழக்கறிஞர் சுப்ரமணியன், சகுந்தலா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் விவேகானந்தன், ஜெயசெல்வி, கலைச்செல்வி, ஏகதேவி, மஞ்சு, இந்திரா, மதிவதனி, பானுப்பிரியா, வினோத் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
