தேனியில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அறிவுசார் மையம்
தேனியில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அறிவுசார் மையம்
UPDATED : நவ 29, 2023 12:00 AM
ADDED : நவ 29, 2023 10:21 AM
தேனி:
தேனி புது பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் ரூ.2கோடி செலவில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் முடிந்து 4 மாதங்கள் ஆகியும் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் தேனி நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் ரூ.2 கோடி செலவில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி 2022ல் துவங்கியது. இதற்காக அப்பகுதியில் 4500 ச.அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அறிவு சார் மையத்தில் 2500க்கும் மேற்பட்ட புத்தகங்ளுடன் நுாலகம், யூ வடிவ மேஜை, குழந்தைகள் படிக்கும் பகுதி, போட்டித்தேர்வுக்கு தயாரகும் பகுதி, கணினி அறை சுகாதார வசதி உள்ளிட்ட வசதிகள் இம் மையத்தில் அமைக்கப்பட்டது. கட்டுமான பணி ஆகஸ்ட் துவக்கத்தில் முடிந்தது. ஆனால் 4 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இம்மையம் அமைந்துள்ளதால் வெளியூர்களில் இருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிகம் வருவர்.
