தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ புது பயிற்சி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ புது பயிற்சி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ புது பயிற்சி


UPDATED : நவ 29, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடிப்படை சுகாதாரம்
நாடு முழுதும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிப்படை சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பருவ கல்வியை அங்கன்வாடிகள் வழங்குகின்றன. தற்போது 14 லட்சம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, தினசரி 8 கோடி குழந்தைகளுக்கு இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அங்கன்வாடி மையங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்காணித்து, அவர்களுக்கு உதவும் திட்டத்தை துவங்கியுள்ளது. இதை செயல்படுத்த, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.இது பற்றி மத்திய அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வரைவுக் கொள்கை 2021ன் படி, குறைபாடு உடைய குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து போதுமான சிகிச்சை அளித்தால், குறைபாடுகளை தடுக்க முடியும்.வாய்ப்புஅங்கன்வாடி பணியாளர்களுக்கு, குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து உதவ பயிற்சி வழங்கப்படும். அதன் வாயிலாக சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு உதவி கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இத்திட்டத்தை துவக்கி வைத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:
குழந்தைகளிடையே ஏற்படும் குறைபாடு சமூகத்திற்கான சவால் கிடையாது. அது குழந்தைகளுக்கு உதவ சமூகத்திற்கு உள்ள வாய்ப்பு. இது பற்றிய விழிப்புணர்வை அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்படுத்துவர்.மேலும், ஒவ்வொரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய தரவுகளும் அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்து அரசின் போஷன் டிராக்கர் செயலி வாயிலாக கண்காணிக்கலாம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பின், சமூகத்தில் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us