UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 01, 2023 04:59 PM
மதுரை:
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப்பல்கலை (இக்னோ) நடத்தும் இந்தாண்டுக்கான பருவத் தேர்வு இன்று (டிச., 1) முதல் துவங்க உள்ளது.மாணவர்கள் அனுமதிச்சீட்டுகளை இக்னோவின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அனுமதிக்கப்பட்ட மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு 2024 ஜன., 9 வரை நடக்கும்.மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 12 நேரடி தேர்வு மையங்கள் உள்ளன. சிறைவாசிகளின் வசதிக்காக மதுரை, திருச்சி, கோவை மத்திய சிறைச்சாலைகளிலும் நேரடி மையங்கள் செயல்பட உள்ளன.தேர்வு தொடர்பான விவரங்களுக்கு மதுரை சிக்கந்தர்சாவடி இக்னோ மண்டல மையத்தை rcmadurai@ignou.ac.in என்ற இ மெயில் முகவரியிலோ, 0452- 238 0775 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மண்டல இயக்குனர் எம்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
