தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போக்சோவில் ஆசிரியர் கைது விடுவிக்க மாணவர் முற்றுகை

போக்சோவில் ஆசிரியர் கைது விடுவிக்க மாணவர் முற்றுகை

போக்சோவில் ஆசிரியர் கைது விடுவிக்க மாணவர் முற்றுகை


UPDATED : டிச 01, 2023 12:00 AM

ADDED : டிச 01, 2023 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2023 12:00 AM ADDED : டிச 01, 2023 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த வாக்கூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் கருணாகரன், 32, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் படி, போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.இதை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்நிலையில் நேற்று, மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, பெற்றோர்களுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின், போலீசார் கூறியதை ஏற்று, சிலர் மட்டும் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரியை சந்தித்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர் கருணாகரனை விடுவித்து மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டி மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட டி.ஆர்.ஓ., விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us