மகளிர் பொறியியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மகளிர் பொறியியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 01, 2023 05:05 PM
புதுச்சேரி:
புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி மற்றும் சென்னை சோகோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மகளிர் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராணி தலைமை தாங்கினார். சோகோ கிரியேட்டர் மார்க்கெட்டிங் மேலாளர் மீரா, இன்றைய தகவல் தொழில் நுட்பத் துறையில் மாணவர்களின் பங்கு, நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை எவ்வாறு தயார்படுத்தி கொள்வது என்பது குறித்து பேசினார்.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்படும் இளம் படைப்பாளி திட்டம் பயிற்சி செயல்முறையை சுருக்கமாக விளக்கினார். நிகழ்ச்சியில், நிறுவனத்தின் அதிகாரிகள் ஸ்டீபன் ஜோயல் மித்ரா, ஆதித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டு, மகளிர் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராணி, நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் மீரா ஆகியோர் இடையே பரிமாறி கொண்டனர். சோகோ நிறுவனத்தின் மூலம் இளம் படைப்பாளி திட்டம் பயிற்சி அடுத்த மூன்று நாட்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 மாணவிகளுக்கு கல்லுாரியில் நடத்தப்பட உள்ளது. பயிற்சியினை முடிக்கும் மாணவிகளுக்கு, வளாக நேர்காணலில் சோகோ நிறுவனத்தால் முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் காந்திமோகன், பத்மராஜ் மற்றும் நிர்மல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
