UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:42 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் நிலை - 1, நிலை - 2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, எமிஸ் இணையதளம் வழியே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.டிச. 14 முதல், 18ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை டிச. 5ம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல், 13ம் தேதி வெளியாகும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
