UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:00 AM
அ நிறம் | அளவு
கடம்பத்துார்: தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியை, வேலுாரில் நடத்தியது.இதில், நுண்கலை நவீன ஓவிய போட்டியில் ரத்தீஷ் சாமுவேல் என்ற மாணவர், மூன்றாம் இடம் பிடித்தார். அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் இடத்தை, சென்னை அண்ணாநகர் அரசு பள்ளி மாணவனும், இரண்டாமிடத்தை திண்டுக்கல் மாவட்டம், தர்மத்துப்பட்டி அரசு பள்ளி மாணவனும் பெற்றனர். ரத்தீஷ் சாமுவேல், திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் ஊராட்சியைச் சேர்ந்தவர். மணவாள நகர் கே.இ.என்.சி., நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார்.
