தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு பாதுகாப்பு ஹொரட்டி வலியுறுத்தல்

பள்ளிகளுக்கு பாதுகாப்பு ஹொரட்டி வலியுறுத்தல்

பள்ளிகளுக்கு பாதுகாப்பு ஹொரட்டி வலியுறுத்தல்


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரின், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு அரசே பொறுப்பு என, சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரின் பல பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. பள்ளிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அரசே பொறுப்பு. இது குறித்து, முதல்வருடன் பேசுவேன்.பாகிஸ்தான் உட்பட, பல நாடுகளில் இத்தகைய சம்பவங்களை பார்த்துள்ளோம். அந்நாடுகளில் பயங்கரவாதிகள், சிறார்களை குறிவைக்கின்றனர். குழந்தைகள் கடவுளை போன்றவர்கள். அவர்களை குறி வைப்பது சரியல்ல. பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என, முதல்வரை வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us