அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் எதிர்ப்பு கையெழுத்து வகுப்பில் பெற்ற தி.மு.க.,வினர்
அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் எதிர்ப்பு கையெழுத்து வகுப்பில் பெற்ற தி.மு.க.,வினர்
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:11 AM
அலங்காநல்லுார்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் பகுதி அரசு பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்று நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்றதால், தி.மு.க.,வினர் மீது பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.சில நாட்களாக தி.மு.க., இளைஞரணி சார்பில் நீட்டை ஒழிப்போம், மாணவர்களை காப்போம் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். அலங்காநல்லுார், வெள்ளையம்பட்டி, முடுவார்பட்டி பகுதி பள்ளிகளில் வகுப்பு துவங்கிய பின் மாணவியரை வெளியே அழைத்து காத்திருக்கச் செய்தனர். அவர்களிடம் நீட் எதிர்ப்பு அரசியல் செய்ய கையெழுத்து பெறுவது என்ன நியாயம் என பெற்றோர் ஆதங்கப்பட்டனர். மாணவர்களை நீட் போட்டி தேர்வுக்கு தயார்படுத்தி வரும் ஆசிரியர்கள் எப்படி இதனை அனுமதித்தனர் என பெற்றோர் கேள்வி எழுப்பினர்.
