விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி பயணித்தால் உயர்ந்த நிலை அடையலாம்
விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி பயணித்தால் உயர்ந்த நிலை அடையலாம்
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:28 AM
பெரியகுளம்:
விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி நோக்கி பயணித்தால் உயர்ந்த நிலை அடையலாம், என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை பதிவாளர் ஷீலா பேசினார். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கலைக் கல்லூரியில் 51 வது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமையில் நடந்தது. கல்லூரி செயலர் குயின்ஸ்லி ஜெயந்தி, தேர்வு ஆணையர் இருதயலூர்து கிளாடிஸ் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் ஷீலா மாணவிகளுக்கு பட்டமளித்து பேசியதாவது:
மாணவிகள் ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்கை நிர்ணயித்து வெற்றிப்படிகளை அடைவதற்கு விடாமுயற்சியுடன் கடின உழைப்பு இன்றியமையாதது. கல்வி வாழ்க்கையை மாற்றும் அழிக்கமுடியாத நிலையான சொத்து. அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வப்போது நான் வீழ்வேன் என நினைத்தாயோ என கூறிய மகாகவி பாரதியாரின் பாடல்களை படித்து நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பாதைகளை கடந்து அதனை சீர்படுத்தி சோலையாக மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.2019 முதல் 2022 படித்த இளங்கலை, முதுகலை மற்றும் நிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்ற 750 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
