தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.35 கோடியில் மாதிரி பள்ளிக்கு தனி கட்டடம்

ரூ.35 கோடியில் மாதிரி பள்ளிக்கு தனி கட்டடம்

ரூ.35 கோடியில் மாதிரி பள்ளிக்கு தனி கட்டடம்


UPDATED : டிச 03, 2023 12:00 AM

ADDED : டிச 03, 2023 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2023 12:00 AM ADDED : டிச 03, 2023 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மாதிரிப் பள்ளிக்கென ரூ.35 கோடி மதிப்பில் தனி கட்டடம் கட்டப்பட உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்தார்.மாவட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கை
அரசு பள்ளிகள் 1326, அரசு உதவி பெறும் பள்ளிகள் 265, உதவி பெறா பள்ளிகள் என மாவட்டத்தில் உள்ள 15 கல்வி வட்டாரத்தில் 1987 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 745 மாணவர்கள், உதவி பெறும் பள்ளிகளில் 65,885 ,இதர பள்ளிகளில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 296 மாணவர்கள் பயில்கின்றனர். மத்திய அரசு பள்ளிகளில் 1026 மாணவர்கள் பயில்கின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் சேர்த்து 15,230 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.மாணவர்களுக்கான மிதிவண்டி, சீருடைகள்
15, 500 இலவச மிதிவண்டிள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 18 ஆயிரம் வண்டிகள் கொடுக்கப்பட உள்ளது. இதேபோல் அனைத்து மாணவர்களுக்கும் பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சீருடைகள், புத்தகங்கள், மலைப்பகுதி மாணவர்ளுக்கு ரெயின்கோட் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.தேர்ச்சி விகிதத்தில் நடப்பாண்டு நடவடிக்கைகள் திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 2022-23 ல் 12 ம் வகுப்பில் 93.77 சதவீதம், 11 ம் வகுப்பில் 92.79 சதவீதம், 10 வகுப்பில் 91.77 சதவீதம் என தேர்ச்சி விகிதம் உள்ளது. மாநில அளவில் 12 ம் வகுப்பில் 21 வது இடம், 10 ம் வகுப்பில் 19 இடத்தில் நமது மாவட்டம் உள்ளது. தற்போதைய ஆண்டில் முதல் 10 இடத்திற்குள் வருவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக கலெக்டர் தலைமையில் தொடர்ந்து தலைமை யாசிரியர்கள் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். காலை, மாலை, சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறோம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான செயல்பாடு
அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக தேசிய அடையாள அட்டை பெறும் முயற்சியாக வட்டார வாயிலாக முகாம்கள் நடத்துகிறோம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடையாள அட்டை பெற்று அவர்களுக்கான உதவித்தொகையை பெற வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயல்படுகிறோம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கென்றே 15 கல்வி வட்டாரத்திலும் பகல் நேர பாதுகாப்பு மையம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உடற்பயிற்சி உட்பட அனைத்தும் கற்கும் வகையில் ஏற்படுத்தி உள்ளோம்.அனைத்து திறனுக்கான வாய்ப்புகள்
கலைத்திருவிழா நமது மாவட்ட மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று மாநில அளவில் பரிசுகளை பெற்றிருக்கின்றனர். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளை பெற்றுள்ளனர். இவ்வாறு பங்கேற்க வைப்பதன் வாயிலாக எல்லா வகையான திறன்களை வளர்த்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறோம். இது வரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 4 மாணவிகள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு அரசு செலவில் சென்று வந்துள்ளனர்.உயர்கல்விக்கான செயல்பாடு
நீட்,ஜே இ இ, கிளாட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஏழை மாணவர்கள் தயாராகும் பொருட்டு உதவித்தொகை, வினாத்தாள் போன்றவற்றை அரசு வழங்குகிறது. வினாத்தாள் மாநில அளவில் அனுப்புகின்றனர். அதில் தேர்வெழுதி அதில் எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து உயர்கல்விக்கு தயாராக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு வகுப்பு உயர்கல்விக்கு வழிகாட்டி என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கென தனி ஆசிரியர்கள் நியமித்து பயிற்சி அளிக்கிறோம். புத்தகங்களும் வழங்கப்படுகிறது. தற்போது வரை 1350 மாணவர்கள் நீட் பயிற்சி எடுக்கின்றனர்.மாணவர்கள் குறைகள் தெரிவிக்க வழிவகை என்ன?
 இதற்காகவே மாணவர் மனது பெட்டி என்ற திட்டம் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் இந்த தலைப்பில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவர் வேண்டுமானலும் ஆசிரியர்களால் ஏதேனும் தொந்தரவிருந்தால் பெயர் கூட தெரிவிக்காமல் கடிதமாக எழுதி போடலாம். தலைமையாசிரியர் அவ்வப்போது பிரித்துப்பார்த்து குறைகளை நிவர்த்தி செய்வார். உயர் அதிகாரிகள் விசிட் செய்தால் புகார் பெட்டியில் ஏதேனும் ஒரு புகார் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வோம்.பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த வழி
நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி என்ற திட்டத்தின் வாயிலாக ஒரு அரசு பள்ளியின் அனைத்து விவரங்களும் இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பொதுமக்கள் எவர் வேண்டுமானாலும் உதவி செயயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மிளிரும் பள்ளி திட்டம் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளியை துாய்மையாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள் என்ற திட்டம் வாயிலாக தமிழ்நாட்டில் சிறந்த விஞ்ஞானிகள், தலைவர்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.மாதிரி பள்ளிகள் குறித்து
ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் தற்காலிகமாக மாதிரி பள்ளி செயல்படுகிறது. அரசு பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 800 பேர் வரை தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவற்றோடு இந்த பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள வகுப்புகள் அனைத்தும் ஸ்மார்ட் வகுப்புகள். அனைத்துமே டிஜிட்டலைஸ்டாக்கப்பட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கும் அரசு உதவுகிறது. மாதிரிப் பள்ளிக்கென ரூ.35 கோடி மதிப்பில் தனி கட்டடம் கட்டப்பட உள்ளது. இடம் தேர்வு செய்தாகி விட்டது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us