தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.18 லட்சம் மோசடி வழக்கு; அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ரூ.18 லட்சம் மோசடி வழக்கு; அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ரூ.18 லட்சம் மோசடி வழக்கு; அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது


UPDATED : டிச 04, 2023 12:00 AM

ADDED : டிச 04, 2023 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2023 12:00 AM ADDED : டிச 04, 2023 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லுாரை சேர்ந்தவர் அந்தோணிதாஸ், 58; அதே கிராமத்தின் அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்.ராணிப்பேட்டை மாவட்டம், மேல்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சினேகா. இவருக்கு வருவாய் துறையில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக, அந்தோணிதாஸ் கூறினார். இதற்காக, சினேகாவிடம் இரு தவணையாக, 4 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை.பலமுறை கேட்டும் பதிலளிக்காததால், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், சினேகா புகார் செய்தார். விசாரணையில், அவர் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பலரிடமும், பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. அந்தோணிதாசை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us