மிக்ஜாம் புயல்: எஸ்.பி.ஐ., வங்கி தேர்வு ஒத்திவைப்பு
மிக்ஜாம் புயல்: எஸ்.பி.ஐ., வங்கி தேர்வு ஒத்திவைப்பு
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 07:10 PM
அ நிறம் | அளவு
சென்னை:
மிக்ஜாம் புயல் காரணமாக,பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைத்துள்ளது.புயலின் காரணமாக, பாரத ஸ்டேட் வங்கி, சென்னை வட்டம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை உள்ளடக்கியது) அப்ரெண்டிஸ்களின் பணிக்கான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 15 மையங்களில் 04.12.2023 அன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
