தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் திறமைகள் வளர்க்க அமைச்சர் உறுதி

மாணவர்களின் திறமைகள் வளர்க்க அமைச்சர் உறுதி

மாணவர்களின் திறமைகள் வளர்க்க அமைச்சர் உறுதி


UPDATED : டிச 04, 2023 12:00 AM

ADDED : டிச 04, 2023 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2023 12:00 AM ADDED : டிச 04, 2023 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
நர்சரி முதல் பி.யு.சி., வரையிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பாடங்கள் மட்டுமின்றி, இசை, விளையாட்டு, கலை உட்பட மற்ற திறமைகளும் வளர்க்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத்தின் அனைத்து இடங்களிலும், கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்க வேண்டும் என, வேண்டுகோள் வந்துள்ளது. வரும் ஆண்டு கர்நாடக பப்ளிக் பள்ளிகளின் எண்ணிக்கையை, 500லிருந்து 600 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.மூன்று ஆண்டுகளில், 3,000 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும். இவற்றில் நர்சரி முதல், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., வரை இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். பள்ளி, கல்லுாரிகளில் பாடங்களுடன், இசை, விளையாட்டு, கலை என, மாணவர்களுக்கு தேவையான விஷயங்களுக்கும், முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us