தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : டிச 05, 2023 12:00 AM

ADDED : டிச 05, 2023 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2023 12:00 AM ADDED : டிச 05, 2023 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2023-24ம் ஆண்டிற்கு தமிழகத்தில் 3,093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது.விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பத்தினை புதுப்பித்து கொள்ளலாம்.நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் முறையே 8 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவி தொகை வழங்கப்படும். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய கல்வி உதவித் தொகை தளத்தில் விபரங்களை பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி15 ம் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களை (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமகளித்தல் துறையின் (https://scholarships.gov.in) இணையதளம் மூலர் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us