UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 10:31 AM
அ நிறம் | அளவு
மதுரை:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் மதுரை சிப்போ நிறுவனத்தில் தொழில் முனைவோருக்கான களிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரின்டிங் தொழில்நுட்ப இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒரு மாத களிமண் பொம்மை தயாரிப்பு பயிற்சியும் உண்டு.சுங்குடியில் மெழுகு, ஸ்கிரீன் பிரின்டிங், முடிச்சு கட்டுதல் குறித்து 3 மாத பயிற்சி அளிக்கப்படும். குறைந்தது 8 வது படித்த 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். மாதம் ரூ.12ஆயிரத்து 500 ஊக்கத்தொகை, மதிய உணவு, பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சிக்கு பின் சான்றிதழுடன் தொழில் தொடங்க ஆலோசனை அளிக்கப்படும். முகவரி: சிப்போ, 52, டி.பி. ரோடு, மகபூப்பாளையம், மதுரை, அலைபேசி: 78715 55825.
