தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும்

மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும்

மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும்


UPDATED : டிச 06, 2023 12:00 AM

ADDED : டிச 06, 2023 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2023 12:00 AM ADDED : டிச 06, 2023 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:
மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும், என திருத்தங்கல் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் உடனான கலந்துரையாடலில் எஸ்.பி., சீனிவாச பெருமாள் பேசினார்.சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் திட்டியதாக ஆசிரியரை இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவர்களுடன் ஒரு நாள் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. சீனிவாச பெருமாள் எஸ்.பி., விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு, போதை பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும் என எஸ்.பி., மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.பின்னர் எஸ்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் எஸ்.பி., அலுவலக முகவரியுடன் கூடிய தபால் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில் நன்றாக படிக்கும்படி ஆசிரியர் திட்டியதால் அவரை மாணவர்கள் தாக்கியது தெரியவந்துள்ளது.இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். சூரியமூர்த்தி ஏ.டி.எஸ்.பி., தனஞ்செயன் டி.எஸ்.பி., தாசில்தார் வடிவேல் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us