தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் அமைத்த மாதிரி சந்தை: கூவிக்கூவி காய்கறி விற்பனை

மாணவர்கள் அமைத்த மாதிரி சந்தை: கூவிக்கூவி காய்கறி விற்பனை

மாணவர்கள் அமைத்த மாதிரி சந்தை: கூவிக்கூவி காய்கறி விற்பனை


UPDATED : டிச 06, 2023 12:00 AM

ADDED : டிச 06, 2023 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2023 12:00 AM ADDED : டிச 06, 2023 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:
சென்னிமலை யூனியன் திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், தமிழில் &'சந்தை&' என்ற பாடத்தை நேரடியாக விளக்கவும், கணிதத்தில் ரூபாய் மற்றும் அளவை கணக்கீட்டை அறிந்து கொள்ளவும், பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமையில், பட்டதாரி ஆசிரியர் ரவி ஏற்பாட்டில், ஒரு நாள் மாதிரி சந்தை அமைக்க அறிவுறுத்தினர்.இதன்படி மாணவர்கள் தங்கள் வீட்டு தோட்டத்தில் விளைந்த கீரை, காய்கறி, தேங்காய், நெல்லிக்காய், கொய்யா, வாழை மற்றும் பூக்கள், கோழி முட்டைகளை, பள்ளிக்கு நேற்று கொண்டு வந்தனர். ஒரு வகுப்பறையில் அவற்றை வைத்து மாதிரி சந்தையில், 21 கடைகளை அமைத்தனர்.அவற்றை மாணவர்கள் மற்ற மாணவ, மாணவியரிடம் விற்றனர். செயற்கை உரமின்றி விளைந்த பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியமானவை என்று கூறி, மாணவர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். பள்ளி ஆசிரியர்களும் காய்கறிகளை விலைக்கு வாங்கினர். விற்காமல் மீதமான காய்கறிகளை சத்துணவுக்கு மாணவர்கள் கொடுத்தனர். இதன் மூலம் மாணவர்கள் ஆர்வத்துடனும், எளிதாகவும் பாடத்தை புரிந்து கற்றுக் கொண்டதாக, ஆசிரியர் ரவி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us