சட்டமன்ற நாயகர் குழு சார்பில் பள்ளி, கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கு
சட்டமன்ற நாயகர் குழு சார்பில் பள்ளி, கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கு
UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:15 PM
நாமக்கல்:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, சட்டமன்ற நாயகர் என்ற குழு சார்பில், பள்ளி, கல்லுாரிகளில், 2 நாள் கருத்தரங்கு நடக்கிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், சட்டமன்ற நாயகர் என்ற குழு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், முன்னாள் பேரவை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியது.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், நுாற்றாண்டு விழா நாயகர் சட்டசபை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 3 பள்ளிகள், 3 கல்லுாரிகளில் இக்கருத்தரங்கு நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.அதன்படி, இன்று (6ம் தேதி) காலை, 10 மணிக்கு, இரா.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மதியம், 12:00- மணிக்கு, ரெட்டிப்பட்டி, பாரதி மேல்நிலைப்பள்ளியிலும், 3:00- மணிக்கு நாமக்கல் (தெற்கு), அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது.நாளை (7ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியிலும், மதியம், 12:00- மணிக்கு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியிலும், 3:00 மணிக்கு, ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியிலும் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
