UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:18 PM
புதுடில்லி:
கடந்த 2019 முதல் 2021 ஆண்டு காலகட்டத்தில் 35,950 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது.லோக்சபாவில் ஐக்கிய ஜனதா தள எம்.பி., ஒருவர் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அபய்யா நாராயணசாமி அளித்த பதில்:
நாட்டில் சமூக பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் ஏதும் இல்லை. தேசிய குற்ற ஆவண காப்பகம் பராமரிக்கும் ஆவணங்களின் படி, மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. 2019 ல் 10,335 மாணவர்களும்,2020ல் 12,526 பேரும், 2021 ல் 13,089 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
