UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:32 PM
அ நிறம் | அளவு
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, வரும் 8ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள், தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. புதிய தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இளங்கோவன் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, 9ம் தேதி வரை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் அறிவித்துள்ளார்.
