தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குப்பையில் வீசப்பட்ட நீட் விலக்கு கடிதங்கள்

குப்பையில் வீசப்பட்ட நீட் விலக்கு கடிதங்கள்

குப்பையில் வீசப்பட்ட நீட் விலக்கு கடிதங்கள்


UPDATED : டிச 06, 2023 12:00 AM

ADDED : டிச 06, 2023 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2023 12:00 AM ADDED : டிச 06, 2023 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக தி.மு.க., இளைஞரணி சார்பில் அச்சடித்து வழங்கப்பட்ட கடிதங்கள், குப்பையில் வீசப்பட்டுள்ளன.தி.மு.க., இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில், நீட் விலக்கு நம் இலக்கு என்ற பெயரில், நீட் தேர்வுக்கு எதிரான, 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்து இயக்கம்மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட்டு,கையெழுத்து பெறப்படுகிறது.இதற்கான கடிதத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி படத்துடன், போராட்டங்களினால், 69 சதவீத இட ஒதுக்கீடு, ஜல்லிக்கட்டு சட்டம் போன்றவை எப்படி தமிழ்நாடு சாத்தியமாக்கியதோ, அதே போன்று, 20க்கும் மேற்பட்ட மாணவர்களை பலி வாங்கிய நீட் தேர்வையும் நீக்குவோம், இது சாத்தியமானதேஎனஎழுதப்பட்டுள்ளது.கடிதத்தில் முதல் பக்கத்தில், மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களே, ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றும், பெயர், மொபைல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை எழுதி கையெழுத்திடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.பெறுநர் முகவரியில், ஜனாதிபதி முகவரி அச்சடிக்கப்பட்டது. இந்த கடிதங்களை, மாணவர்கள்,பொதுமக்கள் என அனைவவரிடமும்கொடுத்து, கையெழுத்து பெற கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சோலபாளையம் செல்லும் ரோட்டில், இந்த கடிதங்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தி.மு.க., தேர்தலின் போது, ஒரு பெட்டியுடன் வந்து மக்களிடம் மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் ஆனால், அனைத்துமனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதே புரியாத புதிராக உள்ளது.தற்போது, நீட் விலக்குக்கு எதிராக கடிதங்கள் எழுதும் திட்டத்தை அறிவித்துள்ளது.அந்த கடிதமும் குப்பையில் வீசப்பட்டுள்ளது. உண்மையில், 50 லட்சம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு செல்லுமா, இதுவும் மக்களை திசை திருப்பும் நாடகமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு, கூறினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us