தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருள் விற்பனையை தடுக்க கூட்டுக்குழு சோதனை

பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருள் விற்பனையை தடுக்க கூட்டுக்குழு சோதனை

பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருள் விற்பனையை தடுக்க கூட்டுக்குழு சோதனை


UPDATED : டிச 06, 2023 12:00 AM

ADDED : டிச 06, 2023 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2023 12:00 AM ADDED : டிச 06, 2023 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, கூட்டுக்குழு அமைத்து சோதனை நடத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., பவித்ரா கூறியதாவது: 
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்றவற்றின் விற்பனையை தடுக்க, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, உணவு பொருட்கள் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்த கூட்டுக்குழு அமைத்து சோதனை நடத்தப்படுகிறது.பள்ளி, கல்லுாரிகளை சுற்றி, 2 கி.மீ., சுற்றளவில் அனைத்து டீக்கடை, பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை கடைகளில் சோதனை நடத்துகிறோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 30 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற விற்பனையில் ஈடுபடும் கடைகளை சீல் வைத்து, 21 நாட்கள் செயல்பட விடாதவாறு தடுக்கிறோம். சில கடைகள் மீது வழக்கு, அபராதம் விதித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us