UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:38 PM
அ நிறம் | அளவு
சென்னை:
புயல் பாதிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை துவங்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீரான உடன் தேர்வு நடக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. பிற மாவட்டங்களில் வழக்கம் போல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
