UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:42 PM
விருதுநகர்:
அரசு மருத்துவமனைகளில் ரேடியோலாஜி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரமானதாக நிரப்ப வேண்டும் என தி ரேடியோலாஜி அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் சங்கத் தலைவர் ஞானதம்பி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
தமிழகத்தின் 38 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரேடியோலாஜி துறையில் 700 க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. புதியதாக மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 11, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இவற்றில் எந்த ஒரு பணியிடமும் கூடுதலாக அறிவித்து நிரப்பவில்லை. அதாவது மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த போது 6 ரேடியோ கிராபர், 2 டார்க் ரூம் அசிஸ்டெண்ட், 1 அட்டெண்டர் பணியிடம் இருந்தது. இவர்கள் காலை முதல் மாலை வரை பணிசெய்வார்கள். ஆனால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும், கூடுதல் பணியிடங்களை உருவாக்காததால் 24 மணிநேரமும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிசெய்கின்றனர்.தமிழகத்தில் தாலுகா மருத்துவமனைகள் 19, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கும் பணியிட பற்றக்குறை தொடர்கிறது. காலி பணியிடத்துடன் கூடுதலாக 250 பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும் என்றார்.
