தமிழகம் முழுதும் பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகம் முழுதும் பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 07:31 PM
சென்னை:
தமிழகம் முழுதும் டிச., 7ம் மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக இந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நாளை துவங்க உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை இன்று காலை அறிவித்தது.இந்நிலையில், முந்தைய அறிவிப்பில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான டிச., 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த தேர்வுகள் டிச.,14 மற்றும் டிச.,20 ஆகிய தேதிகளில் நடக்கும் என பள்ளிகல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் டிச.,11 முதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
