UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 10:12 AM
விருதுநகர்:
விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கம், உடற்பயிற்சிக்கூடத்தின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை நீர் உள்ளே சென்று பொருட்கள், உபகரணங்கள் பாழாகும் நிலை உள்ளது.விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த கலையரங்கத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் மழை நீர் உள்ளே வந்து அலுவலகப்பொருட்கள் பாழாகும் நிலையில் உள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் உடற்பயிற்சிக்கூடத்தின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த ஜன்னல் கண்ணாடிகளின் வழியாக மழை நீர் உள்ளே வருகிறது.மருத்துவ கல்லுாரி துவங்கிய போது 150 மாணவர்கள் பயின்றனர். அவர்களுக்கு தகுந்தவாறு உபகரணங்களை கொண்டு உடற்பயிற்சி கூடம் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 300 மாணவர்கள் சேர்ந்து 450 மாணவர்கள் பயில்கின்றனர். இத்தனை பேருக்கு ஒரே ஒரு உடற்பயிற்சி கூடம் மட்டுமே உள்ளது.மழை நீர் உள்ளே புகுந்து உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகிறது. உடைந்த கண்ணாடி துண்டுகள் காலில் குத்தி மாணவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துகிறது. இந்த கூடத்தில் 450 மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான உபகரணங்கள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு ஏற்ப போதுமான உபகரணங்கள் இல்லாமல் பற்றாக்குறையாகவே உள்ளது.எனவே கலையரங்கத்தின் கண்ணாடி, உடற்பயிற்சி கூடத்தில் உடைந்த கண்ணாடியை சரி செய்வதோடு விரிவுப்படுத்த வேண்டும் என மருத்துவ மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
