ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயற்குழுக் கூட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயற்குழுக் கூட்டம்
UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 11:03 AM
சங்கராபுரம்:
சங்கராபுரத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.வட்டாரத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், விஜயகுமார், லுாக்காஸ், கணேசன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் லட்சுமிபதி பேசினார். கூட்டத்தில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்த்துவைக்க அதிகாரிகளை சந்திப்பது,ஆசிரியர்கள் பணி பதிவேட்டில் மேலொப்பம் இடாமல் இருக்கும் பதிவுகளுக்கு மேலொப்பம் பெற முயற்சிப்பது.ஆசிரியர்கள் கல்வி சான்று உண்மை தன்மை பெறாதவர்களுக்கு அதிகாரிகளை அணுகி சான்றிதழ் பெற்று தருவது உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேறியது.கூட்டத்தில் நடராஜன், சாதிக், அமலதாஸ், சிட்டிபாபு, முனியபிள்ளைராதா, சீமான், செம்பன், இப்ராகிம், முகமது கவுஸ், ரவிகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
