UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 04:30 PM
அ நிறம் | அளவு
அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் பதவியில், 2,582 காலியிடங்களை நிரப்ப, ஜன.,7ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த, 30ம் தேதி முடிவதாக இருந்தது. பின், டிச.,7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக பட்டதாரிகள் விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.இதையடுத்து, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், 13ம் தேதி மாலை, 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு, வரும் 14, 15ம் தேதிகளில், இணைய தளத்தில் வசதி வழங்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
