UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 04:40 PM
க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கல்வி நிறுவங்களின் சமூக, சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் அதன் நிர்வாகத் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும், உலக சவால்களை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் வாயிலாகவும் இந்த தரவரிசை பட்டியல் உருவாக்கப்படுகிறது.அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான பட்டியலில் கனடாவின், டொரன்டோ பல்கலை முதலிடமும், அமெரிக்காவின், கலிபோர்னியா பெர்க்லி பல்கலை இரண்டாம் இடமும், பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலை மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.இந்தியாவைச் சேர்ந்த 56 கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன. அதில், டில்லி பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., ஆகியவை இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. மேலும் இப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலை, வேலுார் வி.ஐ.டி., மற்றும் புதுவை பல்கலை ஆகியவை தேர்வாகி உள்ளன.
