UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 04:44 PM
அ நிறம் | அளவு
கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாக இருந்த, நகர்ப்புறங்களில் வசிக்கும் 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கான வேலையின்மை விகிதம், இந்த ஆண்டின் அதே காலத்தில் 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று நேஷனல் சேம்பில் சர்வே ஆபிஸ் -என்.எஸ்.எஸ்.ஓ., தெரிவித்துள்ளது.நகர்ப்புறங்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கான வேலையின்மை விகிதம் இந்த ஆண்டின் ஜூலை-செப்டம்பரில் 8.6 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், ஒரு ஆண்டிற்கு முன்பு இதே காலாண்டில் 9.4 சதவீதமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் வேலையின்மை அதிகமாக இருந்ததற்கு, கொரோனா தொற்றின் காரணமாக கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
