UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:03 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மிக்ஜாம் புயல் மழை விடுமுறையால், பள்ளிக்கல்வி துறையில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இடமாறுதல் தேதி மாற்றப்பட்டுள்ளது.உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் நிலை -1, இயக்குனர் நிலை -2 போன்ற பதவிகளுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள், வரும், 14 மற்றும், 15ம் தேதி, இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த கவுன்சிலிங், 19ம் தேதிக்கும்; வருவாய் மாவட்டத்தில் இருந்து இன்னொரு வருவாய் மாவட்டத்துக்கான இடமாறுதல் கவுன்சிலிங், 18ம் தேதிக்கு பதில், 20ம் தேதிக்கும் மாற்றப்பட்டுஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
