UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:21 AM
அ நிறம் | அளவு
தியாகராஜநகர்:
எஸ்.வி.சி.கே., உயர்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் விஞ்ஞான புகைப்பட கண்காட்சி நடக்கிறது.பெங்களூரு தியாகராஜநகரில் எஸ்.வி.சி.கே., உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.பள்ளி தலைவர் லட்சுமிபதி கூறியதாவது:
எஸ்.வி.சி.கே., பள்ளியில் இன்று விஞ்ஞான புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ராஜேஸ்வரி அரங்கில் கண்காட்சி நடக்கிறது.விஞ்ஞானம் சம்பந்தமாக மாணவர்கள் தயார் செய்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
