UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 12:05 PM
அ நிறம் | அளவு
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் கர்நாடகா ராயச்சூரிலுள்ள வேளாண் பல்கலை இடையே முதுநிலை மாணவர்களின் ஆராய்ச்சிகளை எளிதாக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, ஆராய்ச்சிகளை இரு பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், ராய்ச்சூர் பல்கலை பதிவாளர் ரங்கவுடா ஆகியோர் கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர்.துணைவேந்தர் கீதாலட்சுமி, முதுநிலை பட்ட மேற்படிப்பு டீன் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
