UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:44 AM
தேனி:
மாவட்டத்தில் நாளை(டிச.,10) 8 மையங்களில் இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான நுழைவுத்தேர்வை 1013 பெண்கள் உட்பட 7560 பேர் எழுதுகின்றனர்.மாநில சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான நுழைவுத்தேர்வு ஆக.,ல் அறிவிக்கப்பட்டது. ஆக.,18 முதல் செப்.,17 வரை விண்ணப்பித்தனர். அதன்படி மாநில அளவில் 2.81 லட்சம் பேர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். எழுத்துத்தேர்வு நாளை(டிச.,10) தமிழகம் முழுவதும் நடக்கிறது.தேனி மாவட்டத்தில் முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வரதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி கம்மவார் சங்கம் கல்லுாரி, மதுரை ரோடு மேரிமாத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் தேர்வு நடக்கிறது. மொத்தம் 7560 விண்ணபதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். பாதுகாப்பு பணிகள், தேர்வு முன்னேற்பாடு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
