UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 04:16 PM
திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் பிறந்த நாள் விழா போட்டி நடந்தது.திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய மொழிகள் உற்சவம் 2023 என்ற தலைப்பில் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அழகம்மாள் முன்னிலை வகித்தார்.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜானகிராமன் வாழ்த்திப் பேசினார். மாணவர்களுக்கு இயற்கை, சுற்றுச்சூழல், இலக்கியம், சமயம், தனித்திறன் வெளிப்பாடு, பாரதியார் பாட்டு, பேச்சு, பரதநாட்டியம், நடனம், ஓவிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சின்னராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சசிகுமார், ராபர்ட் சகாயராஜ், கோவிந்தராஜ், நித்தியா, ஜெயந்தி, அஞ்சலை செய்திருந்தனர். ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.
