UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 04:17 PM
வானுார்:
வானுார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், கபசுர-குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் காய்ச்சல், சளி, இருமல் ஆகிய நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.மாணவ, மாணவியர்கள் நோய் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம், காந்தி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுரளி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அருளமுதம், சின்னதுரை, கல்லுாரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
