மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வி முறையில் சிறப்பாக உள்ளது
மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வி முறையில் சிறப்பாக உள்ளது
UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:20 AM
ராமநாதபுரம்:
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சிறப்பான கல்வி முறை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்தெரிவித்தார்.ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்புவிழா நடந்தது. கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமைவகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். விழாவில் பங்கேற்றுமாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசியதாவது:மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வி முறை சிறப்பாக உள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவில் மட்டுமே வாரத்திற்கு 72 மணி நேரம்உழைக்கின்றனர். மற்ற நாடுகளில் 36 மணி நேரம் மட்டுமேஉழைக்கின்றனர். கொரோனா தாக்கத்திற்குப்பின் இந்திய பொருளாதாரம்வெகுவாக வளர்ந்துள்ளது.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உடல் நலத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை ஒரு மணி நேரம், மாலை 30 நிமிடம் உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். இதனால் உடல்ஆரோக்கியம், அறிவுத்திறன் அதிகரிக்கும்.நாசாவிஞ்ஞானி ஒருவர் அப்துல்கலாமிடம் பேசிய போது அமெரிக்கா 3 முறைநிலவில் தரையிறங்கியுள்ளது. ரஷ்யா 3 முறை, சீனா 9 முறை தரையிறங்கியுள்ளது. இந்தியாவின் இஸ்ரோவும், நாசாவும் இணைந்த முதல் முறையிலேயே நிலவில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டு உலகிற்குஅறிவித்துள்ளோம். இது மிகப்பெரிய வெற்றி. இதனை இந்தியா தான் சாதித்தது.இன்று இந்த வாய்ப்பு உங்களுக்கும் உள்ளது. டி.ஆர்.டி.ஓ., இஸ்ரோ, சி.ஐ.எஸ்.ஆர்., அட்டாமிக் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வாய்ப்புகள்உள்ளன. உங்கள் வெற்றி லட்சியத்தில் உள்ளது. அடுத்தவர்கள் தோல்வியில்இல்லை என்றார்.செய்யது அம்மாள் கலை அறிவியல்கல்லுரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்தம்மாள் டிரஸ் நிர்வாகி டாக்டர் பாபு அப்துல்லா, நேஷனல் அகடமி குரூப் நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செய்யதாஅப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
