UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:23 AM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு:
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக தமிழ்க்கூடல் என்ற நிகழ்வை மூன்று பருவங்களாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜானகி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செல்வம் வருஷநாட்டு தொல்லியல் தடயங்கள் என்ற தலைப்பில்பேசினார்.தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பொருளியல் ஆசிரியர் முத்து நன்றி கூறினார். விழாவில் பேச்சு, கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
