வசதிகளில் தொப்பம்பட்டி பின்னடைவு காந்தி கிராம பல்கலை மாணவர்கள் சர்வே
வசதிகளில் தொப்பம்பட்டி பின்னடைவு காந்தி கிராம பல்கலை மாணவர்கள் சர்வே
UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:27 AM
சின்னாளபட்டி:
தொப்பம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளில் பின்னடைவு உள்ளதாக காந்திகிராம பல்கலை மாணவர்களின் சர்வேயில் தெரிய வந்துள்ளது.காந்திகிராம பல்கலையில் பொருளாதாரம் படிக்கும் 43 மாணவர்கள் ஆத்துார் ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சியில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தினர். மக்களின் பொருளாதார, வாழ்க்கை தரம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டது. ஊராட்சிக்கு உட்பட்ட முத்தம்பட்டி, எர்ரநாகம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, தொப்பம்பட்டி, தொப்பம்பட்டி காலனியிலும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டது.இப்பகுதியில் பொதுக்கழிப்பறை, துணை சுகாதார நிலையம், போக்குவரத்து வசதி போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுவதாகவும், பொருளாதார நிலையில் உதவிகரமான வருவாய் வாய்ப்பு, தொழில் முறைகள் இல்லாத சூழலும் தெரியவந்தது.இக்குழுவில் இடம் பெற்ற மாணவர் மாதேஸ்வரன் கூறியதாவது:
எர்ரநாகம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, முத்தம்பட்டியில் வசிப்போர் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் பெற்றுள்ளனர். தொப்பம்பட்டியில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சுகாதார நிலையம் இல்லாததால் மருத்துவ அவசர கால தேவைகளுக்காக 4 கிலோ மீட்டர் செல்ல வேண்டியது உள்ளது .அருந்ததியர் காலனி பொது கழிப்பறை , துணை சுகாதார நிலையம், போக்குவரத்து போன்ற பிரச்னைகளால் பின்னடைவில் உள்ளது என்றார்.
