தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 09:16 AM
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை துவங்க விருந்த அரையாண்டுத் தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு தள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவைணயை வெளியிடவும், 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்தும், நாளை மறுநாளுக்குள் 4 மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்கள், பள்ளிச்சீருடைகள் ஆகியவற்றை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.புதிய அட்டவணை
இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. டிச.,13 முதல் 22ம் தேதி வரை தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
